மென்பொருளை நிறுவுவது தொடர்பான நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்ளக கட்டுப்பாட்டு பிரிவின் கட்டுப்பாட்டாளரை குற்றப் புலனாய்வு பிரிவு (CID) கைது செய்துள்ளது.

‘பயனர் முகாமைத்துவ தொகுதி’ (User Management Module) என்ற பெயரில் மென்பொருள் தொகுதி ஒன்றுக்காக 9,831,250 ரூபாய் (சுமார் 9.8 மில்லியன்) செலவிடப்பட்டதாக அவர் எழுத்துப்பூர்வமான ஆவணங்களை சமர்ப்பித்துள்ள நிலையில், அவ்வாறான மென்பொருள் தொகுதியை அவர் நடைமுறைப்படுத்தவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த விசாரணையைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக CID-யின் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அரசு நிதி, மோசடியாகப் பெறப்பட்டதாக புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சந்தேக நபர் காவலில் எடுக்கப்பட்டதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியமை மற்றும் கையாடல் செய்தமை அடிப்படையில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில், CID தனது விசாரணையைத் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here