காதல் உறவு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதை அடுத்து, காதலனால் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டதில் காதலி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (18) வென்னப்புவ, வைக்கல பகுதியில் பதிவாகியுள்ளது.
காதலியின் வீட்டிற்குள் கத்திக்குத்து நடந்துள்ளது.
கத்திக்குத்தில் சிக்கி உயிரிழந்தவர் விமல்கா துஷாங்கி சில்வா என்ற 30 வயதுடைய பெண் ஆவார்.
இந்த சம்பவம் தொடர்பாக 21 வயது இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








