உலகப் புகழ்பெற்ற பாடகரும் பொப் இசையின் முடிசூடா மன்னன் என்று அழைக்கப்படும் மைக்கெல் ஜாக்சனின் சகோதரர்களில் ஒருவரான டிட்டோ ஜாக்சன் தனது 70 ஆவது வயதில் காலமானாதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர் ஜாக்சன் 5 என்ற பாப் குழுவை உருவாக்கியவர் ஆவார்.

இது தொடர்பில் அவரது குடும்பத்தினர் வெளியிட்ட செய்தியில்,

“எங்கள் அன்புக்குரிய தந்தை ராக் அண்ட் ரோல் ஹால் ஆஃப் ஃபேமர் டிட்டோ ஜாக்சன் இப்போது எங்களுடன் இல்லை என்பதை கனத்த இதயத்துடன் அறிவிக்கிறோம். நாங்கள் அதிர்ச்சியடைகிறோம், வருத்தப்படுகிறோம், மனம் உடைந்துள்ளோம். எங்கள் தந்தை அனைவரின் மீதும் அவர்களின் நலன் மீதும் அக்கறை கொண்ட ஒரு நம்பமுடியாத மனிதர்,” என்று அவரது மகன்கள் டிஜே, தாஜ் மற்றும் டாரில் ஆகியோர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இவரது மரண செய்தி அறிந்த அனைவரும் தற்போது இரங்கல் செய்திகளை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here