காலி, கொனபீனுவல பிரதேசத்தில் அமைந்துள்ள விற்பனை நிலையம் ஒன்றிற்கு அருகில் உள்ள கட்டடம் ஒன்றிலிருந்து இன்று திங்கட்கிழமை (18.11.2024) காலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொனபீனுவல பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

40 வயது மதிக்கத்தக்க 05 அடி 04 அங்குலம் உயரமுடைய நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமானது கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொனபீனுவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here