4.2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஏலக்காயுடன் கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் ரூ. 4.2 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஏலக்காய் மற்றும் 40 வெளிநாட்டு மதுபான போத்தல்களை கடத்திய குற்றச்சாட்டில் இரண்டு இந்திய பிரஜைகள் உட்பட மூன்று சந்தேகநபர்கள் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (17) அதிகாலை குரண பகுதியில் நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வு பணியக அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வான் ஒன்றில் கடத்தப்பட்டு வந்த 244.320 கிலோகிராம் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஏலக்காய் மற்றும் 40 போத்தல்கள் வெளிநாட்டு மதுபானங்களை பொலிஸார் கைப்பற்றினர்.
சந்தேகநபர்களில் 35 மற்றும் 47 வயதுடைய இரண்டு இந்திய பிரஜைகள் மற்றும் கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருட்களை கடத்த பயன்படுத்தப்பட்ட வானும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதுடன், மூன்று சந்தேகநபர்களும் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







