குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபரும், தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான ரவி செனவிரத்னவினால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
வாகன விபத்தொன்று தொடர்பில் வெள்ளவத்தை காவல்துறையினரால் தாம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் மூலம் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உத்தரவிடக்கோரி ரவி செனவிரத்ன இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
உயர் நீதிமன்ற விதிகளுக்கு அமைய இந்த மனுத் தாக்கல் செய்யப்படவில்லை என பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகத்தினால் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டது.






