வெலிக்கடை காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சடலத்தை மூன்று விசேட வைத்தியர்கள் கொண்ட வைத்தியக் குழுவால் முழுமையான பிரேத பரிசோதனை நடத்தி, அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம், கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கையைப் பரிசீலித்த பின்னரே கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.







