பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊதியங்கள் அதிகரிக்கப்படவில்லை என்றும், அவர்களின் மாத வருமானத்தில் ஏதேனும் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தால் அது தற்போதைய எரிபொருள் விலைக்கு ஏற்ப எரிபொருள் கொடுப்பனவு சரிசெய்யப்பட்டதன் விளைவாகும் என்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெளிவுப்படுத்தினார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், நாட்டின் பொருளாதார நிலைமை வளர்ச்சி அடைந்ததை அடுத்து, அதற்கு தகுதியான அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை அரசாங்கம் திருத்தியமைத்துள்ளதாக தெரிவித்தார்.
“அதன் விளைவாக, எரிபொருள் கொடுப்பனவை பெறும் அனைத்து அரச அதிகாரிகளின் மாத கொடுப்பனவிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களும் திருத்தியமைக்கப்பட்ட எரிபொருள் கொடுப்பனவின் மூலம் அதற்கு ஏற்ப அதிகரிப்பை பெற்றுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படை ஊதியம் எந்த வகையிலும் அதிகரிக்கப்படவில்லை என பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.







