இந்தியாவின் காஷ்மீர் மற்றும் பஞ்சாப் பிராந்தியத்தில் உள்ள சீக்கியர்களின் புனித நகரமான அமிர்தசர் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சுமார் 3 தசாப்தங்களின் பின்னர் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மோதல் தற்போது வலுவடைந்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து அனுப்பப்பட்ட பல ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மேற்கு மற்றும் வடமேற்கில் 26 இடங்களில் ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியாவின் காஷ்மீர் – ஸ்ரீநகர் பகுதியில் 10 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

எனினும் இந்த விடயம் தொடர்பில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து உத்தியோகபூர்வமாக எந்த பதிலும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் இரு புறமும் ஏற்பட்ட உயிரிழப்பு மதிப்பீடுகளின் படி 48 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here