கொட்டகலை கேம்பிரிட்ஜ் பாடசாலையில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த மாணவனொருவர், வழுக்கி விழுந்து பாடசாலை கட்டடத்தில் தலைப்பகுதி மோதியதில் காயம் ஏற்பட்டு  உயிரிழந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (04.10) பாடசாலை இடைவேளை நேரத்தில் சக மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். பிடி எடுப்பதற்காக ஓடிய குறித்த மாணவன், கால் தடுக்கி விழுந்துள்ளார். அவரின் தலைப்பகுதி பாடசாலை கட்டடமொன்றின் சுவரில் மோதியதால் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மாணவன், டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

மேற்படி கல்லூரியில் தரம் 13 இல் கல்வி பயிலும் தலவாக்கலை, கிரேட்வெஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த சிவகுமார் நதீஸ் (வயது – 18) என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் திம்புள்ள – பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here