கிளிநொச்சி ஏ.09 வீதியின் ஆனையிறவு பகுதியில் இன்று  (24) அதிகாலை 4.45 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இரண்டு சிறுவர்கள் உட்பட 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று , வீதியில் சென்று கொண்டிருந்த எருமை மாடுகளுடன் மோதியதுடன்  எதிரே வந்த கயஸ் வானிலும் மோதி குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இவர்களில்  இரண்டு பேர் ஆபத்தான நிலையில்  மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம்  போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள் கிளிநொச்சி  மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை,  விபத்தில் 9 எருமை மாடுகள் உயிரிழந்துள்ளதுடன்,  நான்கு மாடுகள் காயமடைந்துள்ளன.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here