கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் புராதன பொருட்களை தேடும் நோக்கில் அகழ்வு செய்து கொண்டிருந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
32 வயது முதல் 58 வயது வரையிலான இவர்கள் முந்தலம், உக்குவெல, தும்மலசூரிய, பிலியந்தல, யாழ்ப்பாணம், மாதம்பே மற்றும் கெசல்வத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(படம் – AI)








