இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி கடற்படை அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, இரு சந்தேகநபர்களையும் பிணையில் விடுவிக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் இந்த குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.








