மட்டக்குளி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் துப்பாக்கியும் 12 செயல்படக்கூடிய தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் நேற்று (19) ஆம் திகதி இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
குறித்த சந்தேகநபர், வெளிநாட்டில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாகவும், விசாரணைகள் தொடர்வதால் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணையின் போது வெளிப்படுத்தப்பட்ட தகவலின் அடிப்படையில், அதிகாரிகள் மட்டக்குளியில் உள்ள சந்தேகநபரின் வீட்டை சோதனை செய்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் துப்பாக்கியையும் 12 உயிருள்ள தோட்டாக்களையும் கைப்பற்றினர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு மேற்கொண்டு வருகிறது.








