கிழக்கு மாகாண பாடசாலை மட்ட ரக்பி போட்டியில் பாலமுனை மின்ஹாஜ் மஹா வித்தியாலய அணி சாம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது.
சம்மாந்துறை தேசிய பாடசாலை மைதானத்தில் நேற்று முன்தினம் (11) இடம்பெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி போட்டியில் பாலமுனை மின்ஹாஜ் தேசிய பாடசாலை அணி இறுதிப் போட்டியில் மட்டக்களப்பு ஜோசப் பாடசாலை அணியை 35–00 என்ற புள்ளி கணக்கில் அவர்களை வீழ்த்தி வெற்றி பெற்று முதல் தடவையாக சாம்பியனாக தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.








