எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 1,600 மில்லியன் ரூபா செலவாகும் என இலங்கை பொலிஸார், தேர்தல் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி வேட்பாளருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்த சமீபத்திய உளவுத்துறை அறிக்கைகளின் படி, 15ஆம் திகதி முதல் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்த உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில், ஒவ்வொரு வேட்பாளருக்கும் தேவையான பாதுகாப்பினை அளவை அமைச்சகம் தீர்மானிக்கும் எனவும் உரிய பாதுகாப்பு வழங்குவதற்கு தேவையான பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.








