மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழ்நிலை காரணமாக, குவைத்துக்கு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 60 நாட்களுக்கு யுத்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள நிலையிலும் சில காரணங்களை முன்னிறுத்தி இரு நாடுகளும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன
இந்த நிலையில் ஈரான் குவைத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






