“பழங்களை பழுக்க வைக்க நச்சு ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு தேவையான சட்ட விதிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நச்சு ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் சந்தையில் விற்பனை செய்வது தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் வசந்த சமரசிங்க இதனைத் தெரிவித்தார்.
வாழை, மாம்பழம் மற்றும் பப்பாளி ஆகியவற்றிற்கு இவ்வாறான ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவது சமூகத்தில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது என குறிப்பிட்ட அமைச்சர், அடுத்த கட்டமாக இவ்வாறு நச்சு ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தும் இடங்களில் சோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இது குறித்து அறிவிப்புகள் வழங்கப்பட்ட பின்னரும் வியாபாரிகள் இந்த முறையை தொடர்ந்து பயன்படுத்தினால், அதற்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
(படம் :AI)






