என். ஆர் அனீஸ்  நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக J. M. C. J. விஜேதுங்க மற்றும் K. கருணாகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நியமனக் கடிதங்கள் நேற்று பிற்பகல் (20) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் டொக்டர் நந்திக சனத் குமாநாயக்கவினால்  வழங்கப்பட்டன.

முன்னாள் உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்பும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here