சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மாத்திரைகள் மற்றும் பீடி இலைகள் பெரும் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படையினர், பொலிசாருடன் இணைந்து நேற்று (19) கல்பிட்டி ஜனசவிபுர பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இந்த மாத்திரைகள் மற்றும் பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
வடமேல் கடற்படை கட்டளையின் (SLNS) விஜய கடற்படை முகாமிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கல்பிட்டி பொலிசாருடன் இணைந்து கல்பிட்டி ஜனசவிபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் உள்ள சந்தேகத்திற்கிடமான வீடொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது, சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 67,640 மாத்திரைகள் மற்றும் சுமார் 30 கிலோகிராம் பீடி இலை தொகையுடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 38 வயதுடையவர் எனவும், கல்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், சந்தேக நபர், மாத்திரைகள் மற்றும் பீடி இலை தொகை ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.






