வர்த்தக வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க ஆகியோரின் தலைமையில் கூட்டுறவு எரிபொருள் நிலையங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்த விசேட கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கலந்துரையாடலில் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சினால் எரிபொருள் நிலையங்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடிகள், கடனுக்கு எரிபொருள் வழங்குதல், காணி உரிமை தொடர்பான பிரச்சினைகள், நிலையங்களை நிர்மாணித்தல் மற்றும் புனரமைத்தல் உள்ளிட்டவை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் ஜனக ராஜகருண, பொது முகாமையாளர் மயூர நெத்திகுமார உள்ளிட்ட அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் பொது முகாமையாளர்களும் பங்கேற்றனர்.







