நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

சம்பவத்தில் 4 சிறை அதிகாரிகள் மற்றும் 4 கைதிகள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 60 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் சிறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஆவர்.

கைதிகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து இன்று மீண்டும் அமைதியின்மை வெடித்தது.

தற்போது சிறை அதிகாரிகள், பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

நேற்று இரண்டு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற நிலையை தொடர்ந்தே இன்றைய கலவரம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கடந்த இரண்டு நாட்களில் நடந்த வன்முறையில் மொத்தமாக 19 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 60 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here