கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட படோவிட்ட பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13.10) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
கல்கிசை , படோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டவருக்கும் மற்றுமொரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் காயமடைந்தவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வது தொடர்பில் கல்கிசை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







