வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (28) ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தொடரில் உரையாற்ற உள்ளார்.

வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, இன்று அமைச்சர் நாட்டின் தேசிய அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார் எனத் தெரிவித்துள்ளது.

இம்முறை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தொடரின் கருப்பொருளான “நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல், மாற்றத்தை நிர்வகித்தல், அனைவருக்கும் பலன்களை வழங்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பு” என்ற கருப்பொருளுக்கு ஏற்ப அமைச்சர் அந்த உரையை நிகழ்த்துவார் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பொதுச்சபை கூட்டத்தொடருடன் இணைந்ததாக அமைச்சர், ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ், ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பல நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here