உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரான் அமெரிக்காவுக்கு வழங்கிய சமாதான ஒப்பந்தத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்ததை அடுத்து ஏற்பட்ட நிலைமையால் இவ்வாறு மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக அந்த ஊடக அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன.

அதன்படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை தற்போது 1.08% அதிகரித்து 93.47 அமெரிக்க டொலராக உள்ளது.

அதேபோல், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 105 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதுடன், அதன் அதிகரிப்பு 1.60% ஆக பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here