குருநாகல் குளியாப்பிட்டிய பகுதியில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரத்மலேவத்த பிரதேசத்தில் வீடொன்றினுள்  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் வசிக்கும் 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலையாளிக்கு எதிராக குளியாபிட்டிய நீதிமன்றில் கொலை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருந்ததாக கூறப்படுகின்றது.

குறித்த பகுதியில் இடம்பெற்ற இசை கச்சேரி ஒன்றில் கலந்து கொள்வதற்கு முன்னர் வீட்டில் இடம்பெற்ற மதுபான விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட வாக்குவாதமே கொலைக்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் அந்த வீட்டில் வசிப்பவரும் மற்றுமொரு உறவினரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here