கேம் விளையாடுவதற்கு தந்தை கைப்பேசி கொடுக்காததால் 13 வயதுச் சிறுவன் ஒருவன் தவறான முடிவெடுத்து நேற்றைய தினம் 15/09/2024 உயிர்மாய்த்துள்ளான்.
அந்தோனியார் சேர்ச் வீதி, பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த மேர்வின் டயஸ் சிந்துஜன் (வயது 13) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த மாணவனுக்கு அவனது தந்தை கைப்பேசியை கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த மாணவன் வீட்டின் அறையில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளான்.







