கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வத்திரையான் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 95 கிலோ 520 கிராம் கேரளா கஞ்சா சிறப்பு அதிரடி படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று 15.09.2024 விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து அப்பகுதியை சுற்றி வளைப்பை மேற்கொண்ட சிறப்பு அதிரடிப்படையினர், வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை மீட்டுள்ளனர்.
அத்துடன், அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திலும் ஒரு பொதி கஞ்சா இருந்ததுடன் அப்பகுதியில் காணப்பட்ட கப்வாகனத்தையும் சிறப்பு அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்
இச்சம்வத்துடன் தொடர்புடைய பெண் ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.








