கண்டி, அஸ்கிரிய பிரதேசத்தில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றின் பின்புறத்திலிருந்து ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகக் கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் இவர் ஒரு வாரத்திற்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமானது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சடலத்தைப் பார்வையிடுவதற்குச் சட்ட வைத்திய அதிகாரியை சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்ல பொலிஸார் இன்று (11.10) நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கண்டி தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








