துங்ஹிந்த, அபகஹஓயா , கனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நேற்று (2) வோர்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஜா-எல அலெக்சாண்டர் மாவத்தையில் வசிக்கும் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 24 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவரே வைத்தியசாலை வோர்டிலிருந்து இரகசியமாக தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.








