கொழும்பில் இன்று நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தாக கூறப்படும் போராட்டம் தொடர்பில் கோட்டை காவல் நிலைய பொறுப்பதிகாரி அவை தொடர்பான சமர்ப்பணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து தடை உத்தரவைப் பெற்றுள்ளார்.

முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் துமிந்த நாகமுவ, அந்த கட்சியின் கல்வி செயலாளர் புபுது ஜயகொட,அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மதுஷான் சந்திரஜித் உள்ளிட்ட அறுவருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி கொழும்பு கோட்டை மற்றும் காலி முகத்திடலில் நுழைவதற்கு அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை மீறுவது தண்டனைக்குரிய குற்றமெனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here