கொழும்பு பிரதான வீதியில் நெலும்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (07.10) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

எரிபொருள் ஏற்றிச் சென்ற பௌசர் ஒன்று பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது, பஸ்ஸில் பயணித்த இரு பாடசாலை மாணவர்களும் பௌசரின் சாரதியும் உதவியாளரும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here