திருகோணமலை மாவட்டம் கோமரங்கடவலை பிரதேச சபையின் தவிசாளர் பிரகாத் தர்மசேன இன்று (21) காலை அவரது வயலில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை (20) வயல் பாதுகாப்புப் பணிக்காக வீட்டில் இருந்து புறப்பட்ட அவர், இரவு தாமதமாகியும் வீடு திரும்பாத நிலையில், குடும்பத்தினரும் அயலவரும் இன்று காலை தேடியபோது அவரது சடலம் வயலில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரகாத் தர்மசேன, அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியைச் சேர்ந்த வேட்பாளராக போட்டியிட்டு, அதிக வாக்குகளைப் பெற்று கோமரங்கடவலைப் பிரதேச சபையின் தவிசாளராகத் தெரிவானவர்.

சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன், கோமரங்கடவலைப் பொலிஸார் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆரம்பக் கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மரணம் இயல்பானதா அல்லது வேறு காரணமா என்பது தொடர்பான இறுதி தகவல் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே தெரியவரும் என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உருவாக்கியதோடு, தவிசாளரின் திடீர் மரணம் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்களிடையிலும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here