அங்குருவத்தோட்டை பகுதியில் உள்ள ஒரு கோவிலில் இருந்து மூன்று அடி உயர தங்க முலாம் பூசப்பட்ட கலசத்தை திருடிய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் திருடிய பெட்டியையும், அதை கொண்டு செல்ல பயன்படுத்திய வாகனத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







