கிளிநொச்சியில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து சங்குடன்  நேற்று தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தாயகச் செயலணி என்ற அமைப்பின் ஏற்பாட்டில்  தமிழரசுக் கட்சின்  ஆதரவாளர்கள் உள்ளிட்ட ஏனைய கட்சிகளின ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப்பலர் இணைந்து குறித்த பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்தனர்.

நிகழ்வின் முன்னதாக கிளிநொச்சி  கந்த சுவாமி ஆலயத்தில் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் துண்டு பிரசுரங்களும்  விநியோகிக்கப்பட்டன.

நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் முன்னாள் கரைச்சி  பிரதேச சபையினுடைய தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here