திருகோணமலை பிரதேசங்களில் தமிழ் முஸ்லீம் கிராமங்களில் பல பௌத்த விகாரைகளை நிர்மானிக்கப் போகின்றார் சஜித் பிரேமதாஸ இது  வெளிப்படையான விடயம் .

அதேவேளை அவர்  கலாச்சார அமைச்சராக இருந்தபோது அனுராதபுரத்தில் பௌத்த விகாரைகளை கட்டிட ஆய்வுக்காக படம் எடுத்த பல்கலைக்கழக முஸ்லீம் மாணவர்கள் பௌத்த விடயங்களை மதிக்க தெரியாதவர்கள் என கைது செய்தவர் என நாடாளுமன்ற உறுப்பினரும் செயற்திட்ட அமைச்சருமான அலிஸாஹிர் மௌலானா  தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வெய்ஸ்ஒவ மீடியா கற்கை நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பியினர் கிளர்ச்சிக்குரியவர்கள் கடந்த காலத்தில் கிளர்ச்சிகள் ஊடாக நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு சென்றவர்கள் ஆக்க பூர்வமாக எதனையும் சாதித்தவர்கள் அல்ல அறகல போராட்டம் முடிந்தும் பாராளுமன்றத்தை  தீ வைத்து அழிக்க முற்பட்டவர்கள் என்பதுடன் நாட்டில் எத்தனையோ அழிவுகளை ஏற்படுத்தியவர்கள் இவர்கள் எழுச்சிக்கு உரியவர்கள் அல்ல.

அதேவேளை  தென்கிழக்கு பல்கலைக்கழக எந்திரி மாணவர்கள் அனுராதபுரம் கட்டிட ஆய்வுக்காக பௌத்த விகாரைகள் ஆலையங்களுக்கு சென்று அங்கு அதனை ஆய்வு  செய்து புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவிட்டபோது அப்போது கலாச்சார அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாஸ இந்த முஸ்லீம் மாணவர்கள் பௌத்த விடயங்களை மதிக்க தெரியாதவர்கள் உடன் கைது செய்யுமாறு பொலிசாருக்கு கட்டளையிட்டு கைது செய்தவர்.

ஆனால் அதே இடத்தில் பாக்கியா சந்தோஸ் எனும் இசையமைப்பாளர் அங்கு குடித்துவிட்டு ஆட்டம் பாட்டம் செய்தனர் அப்போது அதனை இவரும் சேர்ந்து ரசிக்கின்றார். ஆனால் இந்த பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தி விளக்கமறியலில் வைத்ததுடன் மிகவும் மோசமாக பேசியவர். எனவே அவருடன் நட்பில் இருந்தவன் நான் பல விடையங்களை தெரிந்தபோதும் அவர் ஒரு போதும் கேட்பவர்  அல்ல என்பதுடன்  ஒரு விதண்டாவாதம் பேசுகின்றவர் தான் அவர்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி ஆகிய உடனேயே ரணில் ராஜபக்ஸ  என்ற கோசத்தை எழுப்பியவர்கள் எதிர் கட்சியினர் அவர்கள் நாடு பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது நாட்டை பாரம் எடுத்து மக்களுக்கு உதவாத இவர்கள் கோசத்தை உருவாக்கினார்கள்.

அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ், முஸ்லீம் மக்களின் அபிலாசைகளுக்கு நிறை கொள்கை திட்டத்தில் தந்திருக்கின்றார் அதில் கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மாவட்டம் ஒரு மத்தியஸ்தானமாக வைத்து பல பொருளாதார அபிவிருத்திகளை செய்வதற்காக இளைஞர்களுக்கு ஒரு டிஜிற்றல் கப் ஒன்றை மாவட்டத்தில் ஏற்பாடு செய்து ஒரு இலச்சத்துக்கு அதிகமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க கூடிய விடயங்களை இங்கு மையமாக வைத்து தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே அவரின் வெற்றிக்கு முக்கிய பங்கு மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள ஒவ்வொரு வாக்குகளும் ரணிலுக்கு வழங்குவது அதிதியாவசியமானது எனவே தமிழ் முஸ்லீம் சிங்கள மக்கள் ஒவ்வொருவரும் அவருக்கு வாக்களியுங்கள் என கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here