சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 70 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுக்களுடன் இன்று (03/02/2025) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பெண்ணொருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹோகந்தரவில் வசிக்கும் 42 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் எடுத்துச் சென்ற பல பொருட்களுடன் 47,000 வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகள் அடங்கிய 235 சிகரெட் அட்டைப்பெட்டிகளை மறைத்து வைத்திருந்தபோது, ​​ பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here