அதிக அளவிலான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்த முயன்ற ஒரு வெளிநாட்டவர் மற்றும் ஒரு பெண் உட்பட மூன்று நபர்களை கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

புலனாய்வுப்பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் (PNB) கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவு நடத்திய தனித்தனி சோதனைகளில் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.

பிப்ரவரி 17 ஆம் திகதி,டுபாயிலிருந்து வந்த 51 வயதுடைய இந்தியர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) வருகை முனையத்தில் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடம் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 15,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் (75 அட்டைப்பெட்டிகள்) கைப்பற்றப்பட்டன.

இன்று (பிப்ரவரி 18) நடந்த மற்றொரு சுற்றிவளைப்பில், துபாயில் இருந்து கடத்தப்பட்ட 21,200 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் (106 அட்டைப்பெட்டிகள்) ரஸ்நாயக்கபுராவைச் சேர்ந்த 23 வயது நபர் பண்டாரநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் கைது செய்யப்பட்டார்.

அதே நாளில் நடத்தப்பட்ட ஒரு தனி சோதனையில், துபாயிலிருந்து 46,800 வெளிநாட்டு சிகரெட்டுகளை (234 அட்டைப்பெட்டிகள்) கடத்த முயன்றதற்காக பன்னிபிட்டியவைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

மூன்று வழக்குகள் குறித்தும் கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here