கொனஹேன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மத்துமகல பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19/1/2025) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
மஹபாகே பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மத்துமகல பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபர்களிடமிருந்து 22 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மஹபாகே பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹபாகே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








