கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு அருகில் பறவைக் கூட்டத்தைச் சுட்டுக் கொல்ல முற்பட்டதில் 3 அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் இன்று மதியம் 11.45 மணியளவில், விமான நிலைய ஓடுபாதைக்கு மேலே பறக்கும் பறவைகள் கூட்டம் குறித்து தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து 3 அதிகாரிகள் விமான ஓடுபாதைக்கு அருகில் சென்று, சில வெடிபொருட்களைக் கொண்டு பறவைக் கூட்டத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டனர்.
இந்தநிலையில் குறித்த வெடிபொருட்கள் அதிகாரிகள் பயணித்த மகிழுந்து மீது விழுந்ததாகவும், அதில் பல குண்டுகள் வெடித்து மகிழுந்துகள் மீது தீப்பிடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கமைய கட்டுநாயக்க விமான நிலைய தீயணைப்புத் துறை அதிகாரிகள் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.








