இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்தேக நபராக 33 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி சுகயீனம் காரணமாக உயிர் நீத்த சாந்தனின் 1 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
அத்துடன், அவரின் நினைவாக துயிலாலயம் திறந்துவைக்கப்பட்டது.

சாந்தனின் தாயார் அந்த நினைவாலயத்தை தீபம் ஏற்றி, மலர்மாலை அணிவித்து திறந்துவைத்தார்.


இந்த நிகழ்வில், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
நினைவேந்தலில் ராஜீவ் கொலை வழக்கிலிருந்து விடுதலையான முருகனும் கலந்துகொண்டார்.
இந்த துயில் ஆலயம், வல்வெட்டித்துறை எள்ளங்குளம் துயிலுமில்லத்துக்கு அருகாமையிலுள்ள இந்து மயானத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]








