புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகத்தினால் வழங்கப்படும் ஆற்று  மணல் மற்றும் தரை மணல் கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரம் போன்று போலி அனுமதிப்பத்திரத்தை தயாரித்து மிகவும் இலாபகரமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 கனரக வாகனங்களை நேற்றையதினம் சாவகச்சேரி பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர்.

சாவகச்சேரி பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சாவகச்சேரி பிரதேச போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவினரால், யாழ்ப்பாணம் – மன்னார் பிரதான வீதியின் தனங்கிழப்பு பகுதியில் வைத்து குறித்த இரண்டு கனரக வாகனங்களையும் பிடித்ததுடன் சாரதிகளையும் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த அனுமதிப்பத்திரம் போலியாக தயாரிக்கப்பட்டது தான் என்பதனை புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் இதில் ஒரு சாரதிக்கு பிரிதொரு வழக்கு தவனைக்கு சமூகமளிக்காதமைக்காக சாவகச்சேரி நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

[யாழ் நிருபர்விஜய்குமார் லோஜன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here