சிஐடியின் புதிய தலைவராக சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பி. அம்பவில நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் முன்னர் பொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றி வந்ததுடன் ,சட்டவிரோதபணபரிமாற்றங்கள், பிரமிட் திட்ட மோசடி போன்றவை குறித்த விசாரணைகளிற்கு பொறுப்பாக செயற்பட்டிருந்தார்.
இதேவேளை சிஐடியின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்துவந்த சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் ரொகான் பிரேமரட்ண உட்பட ஐந்து பிரதிபொலிஸ்மா அதிபர்களை தேசிய பொலிஸ் ஆணைக்குழு இடமாற்றம் செய்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் இடம்பெற்றுள்ளது பெண் பிரதிபொலிஸ்மா அதிபர் ஒருவரும் இடமாற்றப்பட்டுள்ளார்.








