யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயனை  மையமாக கொண்டு வடக்கு, கிழக்கு பிரதேசம் முழுவதும் தொண்டாற்றும் சிகரம் கல்வி நிறுவனத்தில் கௌரவிப்பு நிகழ்வு இன்று (2/1/2025) காலை வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம் பெற்றது.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் உதயகுமார் குமாரசாமி அவர்களின் நிதி அனுசரணையில் இயங்கும் குறித்த சிகரம் கல்வி நிறுவனத்தின் கௌரவிப்பு நிகழ்வில், சிகரம் நிறுவனத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் சதீஷ், சிகரம் குழுமத்தின் தலைவர் உதயகுமார் பாஸ்கரன், வத்திராயன் கிராம அலுவலர், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர், வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகிகள் சிகரம் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

[யாழ் நிருபர் – இரட்னசிங்கம் முரளிதரன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here