மஹியங்கனை டைல்ஸ் கைத்தொழில் நிறுவனம் தற்போது வளர்ச்சியடைந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுதத் பலகல்ல தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் திரு.சாமர சம்பத் கைத்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக இருந்த போது மஹியங்கனை ஓடு தொழிற்சாலையில் 52 இலட்சம் ரூபா மின்சார கட்டணத்தை செலுத்தவில்லை எனவும் பலகல்ல மேலும் தெரிவிக்கின்றார். இந்த கண்காணிப்பு பயணத்தில் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகளும் இணைந்து கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1961ஆம் ஆண்டு ஜேர்மன் அரசாங்கத்தின் உதவியுடன் மஹியங்கனை ஓடு தொழிற்சாலை நிர்மாணிக்கப்பட்டு, 2012ஆம் ஆண்டு தன்னார்வ இழப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி தொழிற்சாலை ஊழியர்கள் ஓய்வு பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
விமானப்படையின் முயற்சியால் மீண்டும் இங்கு உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், தேவை குறைந்ததன் காரணமாக கடந்த வருடம் தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.








