அரசாங்கம் வாகன இறக்குமதி வரி மீதான 50% மேலதிக வரியை டிசம்பர் 31 வரை நீடிக்க முடிவு செய்துள்ளதால், இலங்கையில் வாகன விலைகள் கடுமையாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரி முன்னர் இன்று 15 உடன் முடிவடைய இருந்த நிலையில் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த நீடிப்பால் காட்சியறை விலைகள் கணிசமாக அதிகரிக்கும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIASL) தெரிவித்துள்ளது.

எதிர்பார்க்கப்படும் விலை அதிகரிப்பு:

– Suzuki Wagon R: சுமார் ரூ. 5 லட்சம் அதிகரிப்பு

– Toyota Raize: சுமார் ரூ. 10 லட்சம் அதிகரிப்பு

– Honda Vezel:ரூ. 15 – 20 லட்சம் அதிகரிப்பு

– Toyota Prado: ரூ. 30 லட்சம் அதிகரிப்பு

– Land Cruiser: ரூ. 50 லட்சம் அதிகரிப்பு

– Double Cab: ரூ. 20 – 25 லட்சம் அதிகரிப்பு

இது குறித்து வாகன இறக்குமதியாளர் சங்கத் தலைவர் பிரசாத் மனேஜ் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், தற்போது காட்சியறைகளில் உள்ள வாகனங்கள் மே 15க்கு முன்னர் திறக்கப்பட்ட கடன் பத்திரங்கள் (LC) மூலம் இறக்குமதி செய்யப்பட்டவை என்றும், அவற்றுக்கு இந்த மேலதிக வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ஆனால் மே 15க்கு பின்னர் திறக்கப்பட்ட கடன் பத்திரங்களின் கீழ் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு அதிக வரி விதிக்கப்படும். இதனால் விலைகள் அதிகரிக்கும்

மேலதிக வரி நீடிக்கப்படாது என  எதிர்பார்த்தோம். எனினும் பல்வேறு காரணங்களால் அது தொடரப்பட்டுள்ளது. இதன் விளைவாக வாகன விலைகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்” என்று அவர் கூறினார்.

இதுவரை அனுமதிக்கப்பட்ட வாகனங்களில் 90% மேலதிக வரி இல்லாத  கடன் பத்திரங்கள் கீழ் உள்ளவை என்றும், எனினும் தற்போது புதிய வரி கட்டண வாகனங்கள் அனுமதிக்கப்படத் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மீண்டும் மீண்டும் மேலதிக வரி மூலம் விலையை மாற்றுவதற்கு பதிலாக, வரிக் கொள்கையை மறுசீரமைத்தல், கடன் பாத்திரங்களை கட்டுப்படுத்துதல், நிலையான வீதங்களை அமுல்படுத்துதல் போன்ற மாற்று வழிகள் மூலம் சந்தையை ஸ்திரப்படுத்தலாம் எனவும் மனேஜ் தெரிவித்தார்.

தொடர்ச்சியான மேலதிக வரிகள் சந்தையில் பெரிய ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும். எனினும் மற்ற வழிமுறைகள் மூலம் இறக்குமதியை கட்டுப்படுத்தி, அதிக விலை ஏற்றத்தை தவிர்க்கலாம் என அவர் எச்சரித்தார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here