நாட்டின் பெரிய வெங்காய தேவையில் 50% அளவை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளன என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பெரும்போக பருவ அறுவடையில் நாட்டின் ஆண்டு தேவையில் 50% அளவை பூர்த்தி செய்வதே முக்கிய நோக்கம் என  திணைக்களம் கூறியுள்ளது.

நாட்டின் ஒரு ஆண்டுக்கான பெரிய வெங்காய பாவனை சுமார் 3,20,000 மெட்ரிக் தொன் ஆகும்.

வரலாற்றில் அதிகபட்ச பெரிய வெங்காய உற்பத்தி 2014 ஆம் ஆண்டில் நடைபெற்றது. அந்த ஆண்டு 6,000 ஹெக்டேயர் நிலத்தில் இருந்து 1 லட்சம் மெட்ரிக் தொன் பெரிய வெங்காயம் பெறப்பட்டது.

எனினும் உற்பத்தி செலவு அதிகரித்தல் மற்றும் குறைந்த விலைக்கு இறக்குமதி, நாட்டு சந்தையில் விற்கப்படுதல் போன்ற காரணங்களால் விவசாயிகள் பெரிய வெங்காய செய்கையில் இருந்து விலகியுள்ளனர்.

அதற்கமைய மீண்டும் விவசாயிகளை பெரிய வெங்காய செய்கைக்கு ஈர்க்கும் நோக்கில் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெங்காய செய்கையை மேற்கொள்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.

விவசாய திணைக்களத்தின் திட்டங்கள் மற்றும் பயிற்சி பணிப்பாளர் பி. சிசிர குமார இது குறித்து தெரிவிக்கையில், புதிய தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி ஒரு ஏக்கருக்கு கிடைக்கும் பெரிய வெங்காய அறுவடையை அதிகரித்தல் மற்றும் குறைந்த உற்பத்தி செலவில் செய்கை செய்வது குறித்து விவசாயிகளை விழிப்புணர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

அதன்படி எதிர்வரும் அறுவடையில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைய முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here