மட்டக்களப்பு வாகரையில் 7 வயது சிறுமி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 சிறுவர் உட்பட 5 பேரில் 4 சிறுவர்களையும் பிணையில் விடுவித்ததுடன் 18 வயதுயை ஒருவரை எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம்  நேற்று(14) உத்தரவிட்டுள்ளது.

வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் கணவனை இழந்த தாயார் ஒருவர் அவரது 7 வயது சிறுமியை வீட்டில் தனியாக விட்டுவிட்டு தினமும் வேலைக்கு சென்றுவரும் நிலையில் சிறுமியுடன் அந்தபகுதியைச் சேர்ந்த 11 சிறுவன் ஒருவன் விளையாட்டில் தோல்வியடைந்த சிறுமிக்கு தண்டனை என்ற ரீதியில் சிறுமியை தகாதமுறைக்கு ஈடுபடுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த சிறுவன் ஏனைய 14,15,18 வயதுடைய நண்பர்களுக்கும் இந்த சூட்சமத்தை தெரிவித்துள்ளதையடுத்து குறித்த சிறுமியுடன் தனிதனியாக சிறுவர்கள்  விளையாட்டு என்ற பேர்வையில் தகாதமுறைக்கு ஈடுபடுத்தியுள்ள நிலையில் இதனை அவதானித்த அந்தபகுதி இளைஞன் ஒருவர் சிறுமியின் தாயாருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் பொலிஸாரிடம் முறையிட்டதையடுத்து 11 வயதுடைய ஒருவரையும், 14 வயதுடைய இருவரையும் 15 வயதுடைய ஒருவரையும் 18 வயதுடைய ஒருவர் உட்பட 5 பேரை நேற்று  (13) கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை வாழைச்சேனை நீதவான் நீதி மன்றில் முன்னிலைப்பட்டதையடுத்து 15 வயதுக்கு உட்பட் 4 சிறுவர்களையும் சட்ட வைத்தியரிடம் சேதனைக்கு உட்படுத்துமாறும் அடுத்த வழக்கிற்கு முன்னிலையாகுமாறும் பிணையில் விடுவத்ததுடன் 18 வயதுடையவரை எதிர்வரும் 27 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here