13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 20 வயது இளைஞரை மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதானவர் பிங்கிரிய, ஹிருவெல்பொல பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை தற்போது விளக்கமறியலில் உள்ளார் என்பதோடு வெளிநாட்டில் இருந்த தாய் கடந்த மாதம் 01 ஆம் திகதி நாடு திரும்பியுள்ளார் என தெரியவந்துள்ளது.
தாய் வெளிநாட்டில் இருந்த காலத்தில் குறித்த சிறுமி, பாட்டி சிறிய தாய் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் ஒரே வீட்டில் வசித்துள்ளார் என்றும் சந்தேக நபரும் அதே வீட்டில் வசித்து வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
வீட்டில் ஒருவரும் இல்லாத சந்தர்ப்பங்களில் தன்னை குறித்த இளைஞர் துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமி தாயிடம் தெரிவித்துள்ளார். தாயின் முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸ் விசாரணை ஆரம்பமாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலை நீதிமன்ற வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
கைதான சந்தேக நபர் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இது குறித்து மாதம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது








