சமையல் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதையடுத்து உணவுப்பொதிகள் மற்றும் கொத்துரொட்டி என்பவற்றின் விலைகளும் 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளன.

சமையல் எரிவாயு விலை குறைப்பின் நன்மை நுகர்வோருக்கு வழங்கப்படும் நோக்கிலேயே, இவ்விலை குறைப்பு செய்யப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நேற்று (05.06.2024) முதல் உணவுப்பொதி, கொத்து ஆகியவற்றின் விலையை 25 ரூபாவினால் குறைக்க சங்கம் தீர்மானித்துள்ளது.

இதேபோன்று ஏனைய வகை சிற்றுண்டி வகைகளின் விலையும் 10 ரூபாவினால் குறைக்கப்படுவதாக அகில இலங்கை உணவகம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here